உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தாயகம் எங்கிலும் இன்று மாவீரர் நாள்.!

இலங்கை செய்திகள் 11 நிமிடங்கள் முன்
54 பார்வைகள்

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழீழ இலட்சியத்துக்காகவும் தமது இறுதி மூச்சுவரை போராடிக் களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும்.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கிலும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு இரு மாகாணங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பல்வேறு நினைவேந்தல் இடங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர்களின் உறவினர்கள், நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கச் செய்யப்பட்டு ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் துயிலும் இல்ல வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான இடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதிலும் ஏற்பாட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவு – செலவுத் திட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்துக.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த கையோடு எவ்வித அச்சமுமின்றி மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

26 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு.!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு பருத்தித்துறை, சுப்பர்மடத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. பிறந்தநாள் வாழ்த்து வாசகங்கள் பொறிக்கப்பட்ட கேக்…

35 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் மாவீரர் தின பதாகை மற்றும் புலிக்கொடியுடன் இளைஞர் ஒருவர் கைது

மாவீரர் தின பதாகை ( பேனர் ) ,மற்றும் புலிக்கொடி ஆகியவற்றுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை(26) இரவு மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

31 0 0
இலங்கை செய்திகள்

இனத்திற்காகவும் ஈழத்திற்காகவும் போராடிய இனம் இன்று மேய்ச்சல் தரைக்காகப் போராடும் நிலை! – சாணக்கியன் வேதனை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாகத் தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் மற்றும் மேய்ச்சல் தரைக் காணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்…

24 0 0