உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழகத்தின் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை வழக்கில் இன்று தீர்ப்பு

இந்திய செய்திகள் 34 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

தமிழகத்தில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரும் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (27) தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.

திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குறித்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பதற்குக் கடந்த ஜூலை மாதம் 10ஆம் திகதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தீர்ப்புத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட தீபம்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்குப் பதிலாக, வழக்கமான தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மலை உச்சியில்…

120 0 0
இந்திய செய்திகள்

நெல்லை மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்

திருநெல்வேலி மாவட்ட போக்சோ விசேட நீதிமன்ற நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து சென்னை மேல் நிதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் போக்சோ விசேட நீதிமன்ற நீதிபதியாக…

110 0 0
இந்திய செய்திகள்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு…?

பெண் ஆட்சியாளருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்…

108 0 0
இந்திய செய்திகள்

இளைய புரட்சித்தலைவியா? வெட்கக்கேடு! அண்ணாமலை கடும் விமர்சனம்!

நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளமை தொடர்பில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான…

137 0 0