உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் பயணிகளை நடுத்தெருவில் அந்தரிக்க விட்ட இ.போ.ச பேருந்து.!

இலங்கை செய்திகள் 21 நிமிடங்கள் முன்
109 பார்வைகள்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று மக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பேருந்து இன்று காலை 7.15 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றியவாறு மன்னார் நோக்கி புறப்பட்டது. இதன்போது தனங்கிளப்பு பகுதியில் பேருந்து பழுதடைந்துள்ளது.

பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த பகுதியால் வந்த பேருந்தில் ஒருதொகை பயணிகள் ஏறி பயணத்தை தொடர்ந்தனர். அந்த பேருந்தில் ஏற்கனவே பயணிகள் இருந்த காரணத்தால், பழுதடைந்த பேருந்தில் வந்த பயணிகள் முழுமையாக அந்த பேருந்தில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அந்த பயணிகள் நடு வீதியில் நின்று அந்தரித்துள்ளனர். பழுதடைந்த பேருந்தின் சாரதியோ அல்லது நடத்துனரோ வேறொரு பேருந்தை ஏற்பாடு கூட செய்யவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேருந்து பிரச்சினை காரணமாக வேலைகளுக்கு செல்வோர் உட்பட பல்வேறு தேவை நிமித்தம் பயணம் செய்தவர்கள் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பழைய பேருந்துகள் பல போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவை உரிய முறையில் சீர்செய்யப்படாமல் காணப்படுவதால் இவ்வாறான பிரச்சினைகள் பெரும்பாலான இடங்களில் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சீர்செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டம்.!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை…

114 0 0
இலங்கை செய்திகள்

ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும்.!

பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்ற, பக்குவமான, ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் சேவைக்கு வர வேண்டும் என ஐக்கிய மக்கள்…

104 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,புதுக்குடியிருப்பு – முத்தையன்கட்டு…

114 0 0
இலங்கை செய்திகள்

டித்வா வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டம்; வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்.!

கிளிநொச்சி மாவட்ட செயலத்தில் நடைபெற்ற டித்வா வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். டித்வா வீட்டு வசதித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில…

114 0 0