யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தை உ**யிரிழப்பு.!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு – முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்த குழந்தை பிறந்து அடுத்தநாள் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.


