டித்வா வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டம்; வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்.!
கிளிநொச்சி மாவட்ட செயலத்தில் நடைபெற்ற டித்வா வீட்டுத்திட்டம் தொடர்பான கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டித்வா வீட்டு வசதித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில கௌரவ அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போது கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றமை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது கடந்த இரு மாதங்களாக வீட்டுத் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காகவே ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


