கஜமுத்துக்களுடன் இருவர் கைது.!
கொழும்பு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் வாகனத் தரிப்பிட வளாகத்தில் வைத்து, கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 29 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் கடவத்தை மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (23) திங்கட்கிழமை நண்பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கறுவாத்தோட்டம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


