உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உந்துருளிகள் திருட்டு; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
99 பார்வைகள்

குருவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, உந்துருளி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள், உந்துருளிகள் மற்றும் உதிரிப்பாகங்களுடன் எலபாத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 27 வயதுடைய குருவிட்ட மற்றும் உடவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, எலபாத்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த 03 உந்துருளிகள், 11 உந்துருளி செசி பாகங்கள், 05 உந்துருளி எஞ்சின் பாகங்கள் மற்றும் 19 இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவிலிருக்கும் ஈழத்து அகதிகளின் உருக்கமான கோரிக்கை.!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் அகதிகளாய் தங்கவைக்கப்பட்டுள்ள ஈழத்து மக்கள், தமது பிள்ளைகளின்…

103 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பயணிகளை நடுத்தெருவில் அந்தரிக்க விட்ட இ.போ.ச பேருந்து.!

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று மக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பேருந்து இன்று காலை 7.15…

110 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டம்.!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை…

116 0 0
இலங்கை செய்திகள்

ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும்.!

பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்ற, பக்குவமான, ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் சேவைக்கு வர வேண்டும் என ஐக்கிய மக்கள்…

105 0 0