நீரில் மூழ்கிய ஐவர்; ஒருவர் உ**யிரிழப்பு.!
பெந்தோட்டை கடலில் மூழ்கி ஐந்து இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் நேற்று (22) பிற்பகல் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
பேருவளைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதில், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், ஏனைய நால்வரும் கடற்கரையில் உயிர்காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய நால்வரும் பேருவளைப் பகுதியைச் சேர்ந்த 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காணாமல் போன இளைஞரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.


