தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் மாவீரர் நாள் உள்ளிட்ட பல்வேறு நினைவேந்தல் மற்றும் சமூக நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர் வாழும் பகுதிகளிலும், நாடுகளிலும் நடை வருகின்றமை குறிப்பிடத்தக்கது





