உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
118 பார்வைகள்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் கூட்டு சைக்கிள் பயணமான ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ இன் இலங்கைக் கட்ட நிறைவு நிகழ்வு இன்று (22.11.2026) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியா மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் அதிகாரிகள், படையினர் மற்றும் பங்கேற்ற மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். இலங்கையின் 20ஆவது தேசிய மாணவர் படையணிப் பிரிவு – யாழ்ப்பாணத்தால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘மைத்திரி சேது’ என்பது நட்புறவுப் பாலம் எனப் பொருள்படும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாறு, கலாசாரம், மரபுகள் மற்றும் மக்களிடையிலான நெருக்கமான உறவுகளை இப்பயணம் அடையாளப்படுத்துவதாக ஆளுநர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு புவியியல் அண்மையைத் தாண்டி, பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையிலான நீண்டகாலப் பிணைப்புகளால் வலுப்பெற்றுள்ளது என்றார்.

இத்தகைய பயணங்கள் நாடுகளுக்கிடையிலான நட்புறவை இராஜதந்திர உறவுகள் ஊடாக மாத்திரமன்றி, மக்களிடையிலான நேரடித் தொடர்புகள், ஒன்றிணைந்த அனுபவங்கள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஊடாகவும் வலுப்படுத்துகின்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினரிடையே நட்பு, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு இம்முயற்சி சிறந்த தளமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

தேசிய மாணவர் படையணி இளைஞர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம், தேசப்பற்று, குழுவாகச் செயற்படும் பண்பு, பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆளுநர் பாராட்டினார். இத்தகைய பண்புகள் தனிநபர்களின் வளர்ச்சிக்கு மாத்திரமன்றி, அமைதியான, பொறுப்புமிக்க மற்றும் முன்னேற்றகரமான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமானவை என்றார்.

இந்தியா மற்றும் இலங்கையின் இளைஞர்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் ஆழப்படுத்தும் இம்முயற்சியை வடக்கு மாகாணம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், எதிர்காலத்திலும் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு, இருநாட்டு இளைஞர்களும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும் இணைந்து செயற்படுவதற்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

இப்பயணத்தைச் சாத்தியமாக்குவதற்குப் பங்களித்த இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையணிகள், ஏற்பாட்டாளர்கள், அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் ஆளுநர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்ததுடன், பங்கேற்ற மாணவர்களின் பயணம் வெற்றியடையவும், அவர்களிடையே நீடித்த நட்புறவு உருவாகவும் வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இந்திய மற்றும் இலங்கை தேசிய மாணவர் படையணிகளின் பிரதிநிதிகள், சிரேஷ;ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர் படையணியினர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

126 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

118 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

129 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடல் அனர்த்தம்: காணாமல் போன மற்றைய மாணவரின் சட@லமும் பொத்துவில் கோமாரி கடற்பரப்பில் மீட்பு 

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடலில் நீராடச் சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மற்றைய மாணவரின் சடலமும் நள்ளிரவு பொத்துவில்…

142 0 0