தமிழரசின் வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு ஆரம்பம்.!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.







