உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
152 பார்வைகள்

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் கருத்திட்டத்திற்கு அமைவாக சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரஜா சிவில் பொலிஸ் குழுக்கள், கிராமமட்ட பொது அமைப்புக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், வீதி போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியாவில் டெங்கு பரவல் தீவிரம்.!

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய்…

135 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசின் வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு ஆரம்பம்.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.…

136 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்.!

மாவீரர் வாரம் இன்றையதினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில்…

143 0 0
இலங்கை செய்திகள்

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உ**யிரிழப்பு.!

இரத்தினபுரி – பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு…

131 0 0