உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாவீரர் வாரத்தின் முதல் நாள்; முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
129 பார்வைகள்

தமிழ்த் தேசிய மாவீரர் வாரத்தின் முதலாவது நாளாகிய இன்று சனிக்கிழமை காலை, முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

வல்வெட்டித்துறையில் உள்ள மாவீரர் சங்கரின் வீட்டின் முன்பாகச் சுடரேற்றி, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் வடமராட்சி அமைப்பாளருமான வி.கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் மகேஸ்வரி அம்மா மாவீரர் நினைவுச் சுடரை ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, வல்வெட்டித்துறை பதில் நகரபிதா நா.பத்மநாதன் மற்றும் நகர சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் மாவீரர் வாரத்தின் முதலாவது நாளில் முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியாவில் டெங்கு பரவல் தீவிரம்.!

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய்…

135 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசின் வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு ஆரம்பம்.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.…

136 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்.!

மாவீரர் வாரம் இன்றையதினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில்…

143 0 0
இலங்கை செய்திகள்

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உ**யிரிழப்பு.!

இரத்தினபுரி – பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு…

130 0 0