உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வவுனியாவில் டெங்கு பரவல் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
135 பார்வைகள்

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்களின் வளாகங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பழைய டயர்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த வாளிகள் மற்றும் தகரக் கழிவுகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை மூடி வைப்பதுடன், வீட்டுத் தோட்டங்களையும் சுற்றுப்புறங்களையும் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.

காய்ச்சல், தலைவலி அல்லது உடல்வலி ஆகியவை இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக அரச வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவரை அணுகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொள்ளும் சோதனைகளின் போது நுளம்பு பெருகும் இடங்களோ அல்லது குடம்பிகளோ கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்குவற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழரசின் வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு ஆரம்பம்.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.…

136 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்.!

மாவீரர் வாரம் இன்றையதினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில்…

143 0 0
இலங்கை செய்திகள்

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உ**யிரிழப்பு.!

இரத்தினபுரி – பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு…

130 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் கருத்திட்டத்திற்கு அமைவாக சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

151 0 0