உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
132 பார்வைகள்

இரத்தினபுரி – பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு அருகில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் குறித்த சிறுவன் நின்றுகொண்டிருந்த போது, அம்மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

அதற்குள் அச்சிறுவன் சிக்குண்டு இருப்பதை சிறுவனின் தாயார் அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியாவில் டெங்கு பரவல் தீவிரம்.!

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய்…

136 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசின் வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு ஆரம்பம்.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.…

138 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்.!

மாவீரர் வாரம் இன்றையதினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில்…

144 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் கருத்திட்டத்திற்கு அமைவாக சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

153 0 0