உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் ராஜபக்சவுக்கு டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியல்!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
130 பார்வைகள்

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தலைவரான நீதிபதி பிரியந்த லியனகே உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பிணை கோரி சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

எனினும், பிணை வழங்குவதற்கான விசேட சூழ்நிலைக் காரணிகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என வழக்குத் தொடுக்கும் தரப்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0