உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போசாக்கின்மை பிரச்சினைக்கு சுதேச மருத்துவக் கட்டமைப்பின் ஊடாகவும் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
157 பார்வைகள்

இலங்கையில் போசாக்கின்மை பிரச்சினை ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாகத் தொடர்ந்து காணப்படுகின்றது. குறிப்பாக, சிறுவர்களிடையே நிலவும் போசாக்கின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவக் கட்டமைப்பின் ஊடாக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பினார்.

நேற்று (19.11.2026) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதான கேள்வி நேரத்தின்போதே சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களிடம் இந்த கேள்வியை முன்வைத்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் சித்த மருத்துவத் திணைக்களத்திற்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகைத் தோட்டத்தையும், ஏனைய பகுதியில் சித்த மருத்துவ உற்பத்தி நிலையத்தையும் அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த மாகாணசுகாதார அமைச்சராக இருந்தபோது முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அம்முயற்சியை தொடர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கையில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும், சித்த மருத்துவ மருந்துகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தினால், அவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இறக்குமதியின்போது அழகுசாதனப் பொருட்களைப் போன்று வகைப்படுத்தப்படுவதால் அதிக வரி விதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்வதில் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, குறித்த காணியைப் பயன்படுத்தி சுதேச மருத்துவ உற்பத்திகளை மேம்படுத்துவதுடன், போஷாக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலான விரிவான வேலைத்திட்டமொன்றை 2027ஆம் ஆண்டில் முன்னெடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கையில் சிறுவர் மந்தபோஷண நிலை தொடர்பான புள்ளிவிபரங்கள் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாகப் பெரியளவில் மாற்றமின்றி ஒரே நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மாகாண சபைகள், மத்திய அரசாங்கம், சர்வதேச உதவி நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் செயற்பட்டு வருகின்ற போதிலும், எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், ஒரேயொரு மருத்துவ முறையில் தங்கியிருக்காமல் பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து போசாக்கின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சுதேச மருத்துவக் கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் யோசனைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், போஷாக்கை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், சிறுவர்களைக் குறிவைத்து தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் பின் ஜூங் இனால் தரமற்ற ஐஸ்கிறீம் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பையும், நீதிமன்றத்தினால் 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

போசாக்கின்மை பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் சத்தியலிங்கம் எம்பி முன்வைத்த யோசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

123 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

133 0 0