செல்வராசா கஜேந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு அழைப்பு!
கோப்பாய் பகுதியில் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று அம்பாறைப் பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தமையால், குறித்த விசாரணைக்குச் செல்ல முடியாத நிலையில், இன்று (20) காலை 9 மணிக்கு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு, வாக்குமூலம் அளிப்பதற்காக செல்வராசா கஜேந்திரன் சென்றுள்ளார்.


