தோழர் பத்மநாபாவின் 75 ஆவது பிறந்த தினத்தையொட்டி தோழமை தின நிகழ்வு முன்னெடுப்பு.!
தோழர் பத்மநாபாவின் 75 ஆவது பிறந்த தினத்தை யொட்டி நேற்று வியாழக்கிழமை(19) ‘தோழமை தினமாக” ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் அனுசரித்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று (19) மன்னார் மாவட்ட ரீதியாக தோழர்கள், தோழர்களுடைய குடும்பங்கள் இணைந்து, குறித்த நிகழ்வை மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் முன்னெடுத்தனர்.
குறித்த நிகழ்வில் கட்சியினுடைய தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதன்போது தோழர் பத்மநாபாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு உரைகளும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், மூத்த உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்
குறித்த நிகழ்வில் கனடாவில் வாழ்கின்ற கட்சி உறுப்பினரின் பங்களிப்புடன் 50 குடும்பங்களுக்கு, உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











