உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

உலக செய்திகள் 17 மணி நேரம் முன்
145 பார்வைகள்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பான ‘Coalition of the Willing’ அமைப்பின் பேர்லின் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர் அன்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இதனைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 260 மில்லியன் பவுண்ட் பெறுமதியான புதிய உதவித் தொகுதியின் ஒரு பகுதியாக இந்த ட்ரோன் வானுர்திகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த ட்ரோன் வானுர்திகள் 1,000 கிலோமீற்றர் தூரம் வரை பறக்கக்கூடிய திறன் கொண்டவை எனவும், அதிக எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லக்கூடியவை எனவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனூடாக ரஷ்யாவின் இராணுவ உற்பத்தி நிலையங்கள் போன்ற இலக்குகள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த உதவித் தொகுதியில் 80 சதவீதமான நிதி பிரித்தானியாவிற்குள்ளேயே செலவிடப்படவுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

138 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

144 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0
உலக செய்திகள்

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டமில்லை!

Nvidia நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹுவாங் திடீரென பதவி…

116 0 0