றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் மாலை அணியும் நிகழ்வு
றம்பொடை ஸ்ரீ ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் ஐயப்ப சுவாமிகள் மாலை அணியும் நிகழ்வு இடம்பெற்றது .
காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு ஹோம திரவியங்கள் இடப்பட்டு மஹா கணபதி ஹோமம் இடம்பெற்றது. தொடர்ந்து பூர்ணாகுதி இடம்பெற்று ஐயப்பனுக்கு விரதம் இருந்து புண்ணிய யாத்திரை பயணத்தை மேற்கொள்ளும் சுவாமிமார்களுக்கு இன்றைய தினம் மடாதிபதி சிவஸ்ரீ கணேஷ மகேஸ்வர குருசாமியின் கரங்களால் மாலை அணிவிக்கப்பட்டது
இதன் போது ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்





