உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெரிய நீலாவணை முதல் அக்கரைப்பற்று வரை திடீர் கடல் கொந்தளிப்பு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
148 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை இஸ்லாமபாத், கடற்கரைப்பள்ளி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், அட்டப்பளம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்பு காரணமாக, கடல் நீர் கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது.

திடீரென ஏற்பட்ட இக் கடற் கொந்தளிப்பினால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் மற்றும் பாண்டிருப்புப் பகுதிகளில் கரையோரமாக அமைந்துள்ள பல வீடுகளும் வளவுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமும் கலவரமும் அடைந்ததுடன் கடுமையான அசௌகரியங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.இதே வேளை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அவர்களது படகு தோணிகளை கரைக்கு இழுத்து பாதுகாத்து வருவதனை காண முடிந்தது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக மாநகர சபையின் கனரக இயந்திரங்கள் மூலம் அப்பகுதிகளில் தேங்கிய நீரை அகற்றுவதற்காக வெட்டப்பட்ட கால்வாய்கள் ஊடாகவும் தற்போது கடல் நீர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளதால், அதனை அகற்றும் அவசரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை முதல் அக்கரைப்பற்று வரையிலான பிராந்தியப் பகுதிகளில் அண்மைக் காலமாகத் தொடர்ச்சியாகக் கடலரிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் உடனடியாக அவசர நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்காள விரிகுடாவில் உருவான ‘அக்வான்’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புயல் எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையில் நெல்லூர் – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

147 0 0