மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்
ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.
இதற்கமைய, பாகிஸ்தான் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதமும், இலங்கை அணிக்கு 50 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை விட பாகிஸ்தான் 5 ஓவர்களும், இலங்கை அணி 15 ஓவர்களும் குறைவாக வீசியுள்ளன.
இதன் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணியின் 5 புள்ளிகளும், இலங்கை அணியின் 15 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி நடுவர் டீன் கொஸ்கர் இந்தத் தண்டனைகளை விதித்துள்ளார்.
இந்நிலையில், இரு அணிகளின் தலைவர்களான பாபர் அசாம் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, முறையான விசாரணைகள் இன்றி தண்டனைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


