உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார் டோனி!

106 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான மகேந்திர சிங் டோனி, ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த டோனி, தனது சிறப்பான தலைமைத்துவத்தின் மூலம் சென்னை அணிக்கு இதுவரை 5 ஐபிஎல் செம்பியன் கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அத்துடன், 2 செம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்து சென்னை அணியை உலகளவில் புகழ்பெற்ற அணியாக மாற்றினார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, ரசிகர்களுக்காக ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார்.

2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய அவர், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

இந்த நிலையில், 45 வயதான டோனி உபாதை காரணமாகக் கடந்த 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.

2027-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் (Retention) இறுதி நாள் நெருங்கியுள்ள நிலையில், வீரராகத் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Mentor) புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் களத்தில் தனது அமைதியான ஆட்டத்தாலும், மின்னல் வேக ஸ்டம்பிங் மற்றும் இறுதி நேர அதிரடிகளாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ‘தல’ தோனியின் இந்த ஓய்வு முடிவு, கிரிக்கெட் உலகிலும் சென்னை அணி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

120 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

124 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

150 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

89 0 0