உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவை இடைநிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
107 பார்வைகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில், இன்று (18) நள்ளிரவு முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக ஒன்லைன் முறையில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் சேவையும் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வருமான அனுமதிப்பத்திரம் பெறவிருக்கும் அனைத்து வாகனங்களுக்கும், தண்டப்பணம் எதுவும் வசூலிக்கப்படாமல் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் இலத்திரனியல் அமைப்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பப் புதுப்பித்தல் காரணமாகவே குறித்த காலப்பகுதியில் இந்தச் சேவை இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

1 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

131 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

133 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

125 0 0