உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எதிர்க்கட்சி சமநிலையிலும் இல்லை, மாற்றத்தைக் காணவும் தயாரில்லை.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
99 பார்வைகள்

“மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்பது எமது கொள்கைப் பிரகடனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஐந்து வருட கொள்கைப் பிரகடனத்தை நாம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவோம்.” – என்று பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அந்தச் சிரமங்களை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளோம். ஆனால், இவ்வாறு ஏற்றுக்கொள்வதை அரசின் பலவீனம் என்று கருதக்கூடாது. நாட்டை நாம் கட்டம் கட்டமாகக் கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றோம்.

எதிர்க்கட்சியின் இன்றைய நிலைமையோ, அவர்கள் ஸ்திரமான நிலையிலும் இல்லை, மாற்றத்தைக் காணவும் தயாரில்லை. வரவு – செலவுத் திட்டத்தை ஆழமாக ஆராய்ந்து எதிர்க்கட்சி தனது ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பழைய முறைகளைப் பின்பற்றி நாட்டை முன்னேற்ற முடியாது.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாகவே உள்ளன. அபிவிருத்தியடைந்து வருவதாகக் கூறப்படும் பல நாடுகளை விடவும் குறைந்த விலைகளிலேயே இங்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. எரிபொருளுக்காக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கி அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.

மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் என்பது எமது கொள்கைப் பிரகடனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஐந்தாண்டுத் திட்டத்தை நாம் திட்டமிட்ட முறையில் கட்டம் கட்டமாகச் செய்வோம். சகல துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலிருந்தே அரசு செயற்படுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

1 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

131 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

133 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

125 0 0