உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
99 பார்வைகள்

சவூதி அரேபியாவில் தண்டனைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அனோஜன் விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். குறிப்பாக, வெளிவிவகார அமைச்சு இப்போது வரை அந்த விடயத்தில் மிகுந்த ஈடுபாட்டுடனேயே செயற்பட்டு வருகின்றது. அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மேலும் பல இராஜதந்திர மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான திகதி குறித்துத் தற்போது உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அதற்குரிய நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசு என்ற ரீதியில் வெளிவிவகார அமைச்சும், தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்த விடயத்தில் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

1 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

131 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

133 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

125 0 0