உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இளைஞன் கைது.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
109 பார்வைகள்

கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானத்தை வழங்கிப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 19 வயது இளைஞன் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – திருவையாற்றுப் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சமயத்தில், அவரை ஏமாற்றி அழைத்துச் சென்றே இந்த வன்கொடுமை இழைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் விசா அலுவலகம் ஒன்றை நடத்திவரும் இளைஞன் ஒருவரே சிறுமியை இவ்வாறு அழைத்துச் சென்று இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0