உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நல்லதொரு பொருளாதாரக் கையிருப்போடு ரணில் நாட்டைக் கையளித்தார் என்பது பொய்யான கூற்று.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
102 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கப்பட்டுவிட்டது என்றும், நல்லதொரு பொருளாதாரக் கையிருப்போடு நாட்டைத் தற்போதைய அரசிடம் ரணில் விக்கிரமசிங்க கையளித்தார் என்றும் கூறப்படுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் பொய்யான கூற்று என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2022ஆம் ஆண்டில் நாடு கடன் செலுத்த முடியாமல் வங்குரோத்தடைந்திருந்தது என்பது தெளிவான உண்மையாகும். ஆனால், தற்போதைய அரசு 2024ஆம் ஆண்டின் பின்னர்தான் ஆட்சியைப் பொறுப்பேற்றது. ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தி நல்லதொரு கையிருப்போடு நாட்டை வழங்கினார் எனக் கூறுவதில் உண்மையில்லை. அவ்வாறாயின் சர்வதேசப் பொருளாதாரத் தரப்படுத்தல்களில் இந்நாடு முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.

2017இல் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலும் அரசின் மொத்த வருமானத்துக்கும், கடன்களுக்கான வட்டிச் செலவுகளைத் தவிர்த்த ஏனைய செலவுகளுக்கும் இடையிலான நேர்மறையான வேறுபாடு குறைவாகவே இருந்தது. அவ்வாறு அன்று திறைசேரி நிரம்பியிருந்தமை உண்மையென்றால், அக்காலப்பகுதியில் ஏன் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை?

வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டைப் பொறுப்பேற்று, பல பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்குத் தேவையான சம்பள அதிகரிப்புகளையும் நிவாரணங்களையும் தற்போதைய அரசு படிப்படியாக வழங்கி வருகின்றது. எதிர்காலத்திலும் இவ்வாறான நேர்மறையான செயற்றிட்டங்களை அரசு தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

1 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

131 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

133 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

125 0 0