உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐயப்பன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
107 பார்வைகள்

நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பன் தரிசனம் செய்தனர்.

ஐயப்பன் கடவுளின் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் இன்று (17) நானுஓயா கிளரண்டன் கீழ் பிரிவில் அமைத்துள்ள ஆலயத்தில் விரதம் இருந்து மாலை அணிந்துகொண்டனர்.

ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். இன்று கார்த்திகை மாதப் பிறப்பைத் தொடர்ந்து கிளரண்டன் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நானுஓயா உள்ள கிளரண்டன் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர்.

தொடர்ந்து கணபதி ஓமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை அணிந்து அதன் பின் ஐயப்பன் பூஜை இடம்பெற்று ஐயப்ப பஜனை நடைபெற்ற பின் பூஜையில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் ஐயப்பன் பூஜைகள் இடம்பெற்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

117 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

131 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

126 0 0