உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
111 பார்வைகள்

இலங்கை கடற்படையினரால், கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், உள்நாட்டு கடற்பரப்பை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 நபர்களுடன் 18 படகுகளும் கைப்பற்றப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, திருகோணமலை பொல்மல்குடா, நீலாக்கேணி, கோணேஸ்வரம், கொக்கனட் பொயிண்ட், பவுல் பொயிண்ட், பிளாக் ஸ்டாப், சல்லிக்கோவில், முல்லைத்தீவு நாயாறு, புதுமாத்தளன், மன்னார் தாழ்வுபாடு, பேசாலை, ஊருமலை, புத்தளம் நுரைச்சோலை மற்றும் கருகப்பனை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில், கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஈச்சிலம்பற்று, கோட்பே, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடமும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

117 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

131 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

126 0 0