உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முட்டையின் விலை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
115 பார்வைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஒரு முட்டை 42 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நிலவிய கடும் மழை மற்றும் காலநிலை மாற்றங்களினால் முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது.

முன்னர் சுமார் 80 சதவீதமாக இருந்த கோழிப்பண்ணைகளின் உற்பத்தித் திறன் தற்போது 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

கோழித் தீவனத்திற்காகப் பயன்படுத்தப்படும் சோளம் உட்பட மூலப்பொருட்களின் விலைகள் அண்மையில் அதிகரித்துள்ளதால் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரிகள் தமது உற்பத்தித் தயாரிப்புகளை ஆரம்பித்துள்ளதால் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இது செயற்கையான விலை ஏற்றம் அல்லவென்றும், வழங்கல் மற்றும் கேள்வி அடிப்படையிலேயே விலை அதிகரித்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தொடரக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

117 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

131 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

126 0 0