கிளிநொச்சியில் வெடித்த போராட்டம்.!
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கடந்த 08.11.2026ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் கிராமத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சாந்தபுரம் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு போதைப்பொருளே காரணம் எனவும் போதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் கையளித்திருந்தனர்.





