உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு : ரவிகரன் எம்.பி இரங்கல்!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
122 பார்வைகள்

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகத் துணிவுடன் குரல் கொடுத்த மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழ்தேசிய மூத்த அரசியல் செயற்பாட்டாளர் சிவாஜிலிங்கம் அவர்களுக்கான இரங்கல் செய்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகத் துணிவுடன் குரல் கொடுத்த மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், தேசிய அபிலாசைகள் மற்றும் நீதிக்கான போராட்டங்களில் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள்.

தமிழ் மக்களின் உரிமைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து, பல்வேறு அரசியல் சூழல்களிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற அவரது பங்களிப்புகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.

அவரது மறைவு தமிழ் அரசியல் சமூகத்திற்கும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்னாரது ஆன்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0