உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமரர். சிவாஜிலிங்கத்தின் மறைவிற்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கௌதமன் இரங்கல்

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
126 பார்வைகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் மறைவிற்கு தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கௌதமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐயா சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இறுதிவரை உறுதி குறையாத போராளியும் இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் மூச்சடங்கிய செய்தியறிந்து மலை விழுந்த மண்பானையாய் மனம் நொறுங்கிப்போனது.

ஐநா மன்றமாக இருந்தாலும் இலங்கை பாராளுமன்றமாக இருந்தாலும் தமிழ்நாடு மற்றும் இந்திய ஒன்றிய அதிகார மையங்கள் எதுவாக இருந்தாலும் எவ்வித  சமரசமுமில்லாமல் நேர்மையோடும் உறுதிப்பாட்டோடும் உரிமை மீட்க பெரும் குரலெடுத்துப் போராடியவர்.

சென்னை வரும் போதெல்லாம் அவருக்கு தோதாகும் நேரத்தில் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வருவார். ஒன்றாக இருந்து உணவருந்தி பேரன்போடும் பெரும் பாசத்தோடும் உரையாடுவார். நேரிடையாகவோ அல்லது அலைபேசியிலோ பேசினால் கூட இடைவெளியில்லாத ஒரு சகோதர உணர்வு எல்லா நேரத்திலும் இழையோடும்.

மாற்று இயக்கத்தில் வளர்த்திருந்தாலும் தமிழீழத் தேசிய தலைவரின் மேல் அவர்போல பற்று வைத்து துணை நின்றவர்கள் அரிதினும் அரிதானவர்களாகவே இருப்பார்கள். ஐநாவிற்கு சென்றபோது அங்கும் அன்போடு பழகியிருக்கிறோம். சொல் செயல் பேச்சு மூச்சு எல்லாமே அவருக்கு தமிழீழம்தான்.

நீண்ட காலமாகவே இயற்கை அவரது உள்ளுருப்புகள் ஒவ்வொன்றாக சிதைத்து அவரை சித்திவதை செய்துகொண்டிருந்தது. உடல் வலியோடு சேர்ந்து அளவற்ற பேரிழப்பாலும்  திட்டமிட்ட இனவழிப்பாலும்  கைக்கூடாமல் போன தமிழீழ பெருவலியே அவரை துடிதுடிக்க செய்து கொண்டிருந்தது.

ஐயா சிவாஜிலிங்கம் அவர்களைப் போலவே நேர்மையாக நின்று இறுதிவரை உறுதியோடு போராடி இழந்த தமிழீழத்தை மீட்டெடுப்பது  ஒன்றே உலகத் தமிழர்களாகிய நாம் ஐயா அவர்களுக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0