உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

குகைக்குள் நடந்த கொடூரம் : காணாமல் போன சிறுமி பச்சிளம் குழந்தையோடு மீட்பு!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
127 பார்வைகள்

ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர், அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் பொலித்தீன் விரிப்புகளால் மறைக்கப்பட்ட கற்குகை ஒன்றுக்குள் குழந்தையொன்றைப் பிரசவித்து, இரண்டு மாதப் பச்சிளம் குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகாமையில் அமைந்துள்ள உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே கனதகெட்டிய – தம்படே பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் திடீரெனக் காணாமல் போயிருந்தார்.

இது குறித்துச் சிறுமியின் குடும்பத்தினர் உடுதும்பர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, உடுதும்பர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷித தொம்பகம்மன தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கித்துள் கைத்தொழில் பிரதானமாக இடம்பெறும் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, தனிநபர் ஒருவருக்குத் தேவையான அளவை விட அதிகளவான அரிசியை நாளாந்தம் கொள்வனவு செய்து செல்லும் 23 வயதுடைய இளைஞன் மீது பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞனை இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றடைந்தனர்.

அங்கு பொலித்தீன் விரிப்புகளால் மறைக்கப்பட்டிருந்த கற்குகை ஒன்றுக்குள் இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் தங்கியிருந்த 15 வயதுச் சிறுமியைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சிறுமி மற்றும் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் நெஞ்சை உலுக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வித மருத்துவ வசதிகளுமின்றி குறித்த கற்குகைக்குள்ளேயே சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

பிரசவத்தின் பின்னர் கித்துள் கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலினால் குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்பட்டுள்ளது.

மேலும், தாய்க்கும் சேய்க்கும் காட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட கைமருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், கித்துள் பாணி காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்டியிலேயே குழந்தையைக் குளிப்பாட்டியுள்ளதாகவும் அந்த இளைஞன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய இளைஞனும், அவனுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகக் கூறப்படும் 36 வயதுடைய அவனது மாமனும் உடுதும்பர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 363ஆவது பிரிவின் கீழ், 16 வயதுக்குக் குறைந்த சிறுமியொருவரின் சம்மதத்துடனோ அல்லது சம்மதமின்றியோ மேற்கொள்ளப்படும் பாலியல் உறவு சட்டபூர்வமான பாலியல் வல்லுறவாகக் கருதப்படுவதால் இது பாரதூரமான குற்றமாகும்.

அத்துடன், மருத்துவக் கண்காணிப்பின்றி குகைக்குள் பிரசவம் பார்த்தமையும், சுகாதாரமற்ற கூரிய ஆயுதத்தால் தொப்புள் கொடியை வெட்டியமையும் தாய்க்கும் சேய்க்கும் ஏற்ப (Tetanus) போன்ற உயிராபத்தான தொற்றுக்கள் ஏற்படக்கூடிய பாரிய அபாய நிலையை உருவாக்கியிருந்தது.

பொலிஸாரால் மீட்கப்பட்ட இளம் தாயும் இரண்டு மாதக் குழந்தையும் உடுதும்பர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களால் குழந்தை குளிப்பாட்டிச் சுத்தம் செய்யப்பட்டு, மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0