உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
15 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர அரசை நிச்சயம் இல்லாது ஒழிப்போம்.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
85 பார்வைகள்

“தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை விரைவில் இல்லாது ஒழிப்போம். எதிர்காலத்தில் தேர்தலொன்று நடத்தப்படும் பட்சத்தில் மக்கள் தீர்ப்பு ஊடாக அதனை நிச்சயமாகச் சாதித்துக் காட்டுவோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நெருக்கமான பிக்குகள் தரப்பைச் சேர்ந்த இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் மற்றும் சமீபத்திய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் பௌத்த பிக்குகள் தூங்குவதைப்போல வெளிப்படையாகத் தோன்றினாலும், அவர்கள் எப்போதும் விழிப்புடனேயே இருக்கின்றார்கள். தகுந்த நேரத்தில் விழித்தெழுவார்கள். அரசை விரட்டுவதற்காகத் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு பொல்லுகளுடன் நாங்கள் வீதிக்கு இறங்கப் போவதில்லை. மாறாக, நாட்டில் தேர்தலொன்று நடத்தப்படும் பட்சத்தில் நாங்கள் நிச்சயமாக உங்களை (அரசை) இல்லாது ஒழிப்போம்.

புனித பூமிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் பிக்குகளுக்கு முழுமையான உரிமை உண்டு. அது ஒன்றும் எவரது தனிப்பட்ட உயர்பாதுகாப்பு வலயம் அல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சத்தாதிஸ்ஸ தேரர், “பிக்குகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிக்கு இராஜாங்கன தேரர் வருகை தரவுள்ளார் என்ற தகவல் பொலிஸாருக்கு ஏற்கனவே நன்கு தெரிந்திருந்தது. இருப்பினும், அவர்கள் இராஜாங்கன தேரரைத் திட்டமிட்டே தடுத்து நிறுத்தவில்லை. இவ்வாறான மோதல் அல்லது குழப்ப நிலைமைகள் அங்கே நிகழவேண்டும் என்பதே பொலிஸாரின் நிலைப்பாடாகவும் மறைமுக விருப்பமாகவும் இருந்தது.” – என்று குற்றம் சுமத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு.!

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…

78 0 0
இலங்கை செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா?

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா என இன்று (14.11.2026) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்…

83 0 0
இலங்கை செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு; நாடாளுமன்றத்தில் கடும் அமளி.!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் திடீரெனப் பெருமளவில் அதிகரித்தமை தொடர்பில், இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும்…

33 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.!

2027 ஆண்டில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்குபடுத்தலில் விசுவமடு சந்தியில் நடைபெற்றது. விசுவமடு புளியடி சந்தையில்…

85 0 0