மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.!
2027 ஆண்டில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்குபடுத்தலில் விசுவமடு சந்தியில் நடைபெற்றது.
விசுவமடு புளியடி சந்தையில் இருந்து மாவீரரின் பொது உருவப்படம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கெளரவிக்கப்பட்டதுடன். மாவீரர் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.







