உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
15 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் எங்கே செல்கின்றன? பாராளுமன்றத்தில் சாணக்கியன் சரமாரியாகக் கேள்வி!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
86 பார்வைகள்

2026 ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினங்கள் மற்றும் அஸ்வெசும நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் அரசாங்கத்திடம் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

2026 நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி–பதில் நேரத்தின்போது, 2026ஆம் ஆண்டின் அரசாங்க நிதி முகாமைத்துவம், அமைச்சுகளுக்கான மூலதன ஒதுக்கீடுகளின் பயன்பாடு மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் நிதிப் பயன்பாடு தொடர்பில் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. பல முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வெளியிடப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவர் இக்கேள்விகளை எழுப்பினார்.

அந்த அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான முதல் ஆறு மாதங்களில் அரசாங்கம் 1,244.1 பில்லியன் ரூபா முதன்மை வரவு உபரியைப் பதிவு செய்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கியிருந்த 72 பில்லியன் ரூபா இலக்கை விட அதிகமாகும்.

எனினும், இந்த நிதி உபரிக்கு அதிகரித்த வரி வருமானச் சேகரிப்பும், மூலதனச் செலவினங்கள் எதிர்பார்த்த அளவில் மேற் கொள்ளப்படாமையும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான 1,719 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டில், முதல் ஆறு மாதங்களில் வெறும் 277 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. இது வருடாந்த ஒதுக்கீட்டில் 16.1 சதவீதமாகும்.

அதேபோன்று, அஸ்வெசும உள்ளிட்ட குடும்பங்களுக்கான பண உதவித் திட்டங்களுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 231 பில்லியன் ரூபாவில், முதல் ஆறு மாதங்களில் 89.6 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 38 சதவீதமாகும். இந்தப் பின்னணியில் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. அரசாங்கத்திடம் பின்வரும் கேள்விகளை முன்வைத்தார்:

2026 ஜூன் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், தமக்கான மூலதன நிதி ஒதுக்கீடுகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்திய ஐந்து அமைச்சுகள் எவை?

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமைச்சுகள் தமக்கான மூலதன நிதி ஒதுக்கீடுகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போனதற்கான பிரதான காரணங்கள் என்ன?

ஏனைய அமைச்சுகளால் நிறைவு செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான கட்டணப் பட்டியல்களில், 2026 ஜூன் 30ஆம் திகதி வரை நிதி அமைச்சுக்கு கிடைத்தும் இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகை எவ்வளவு?

2026ஆம் ஆண்டுக்கான பயன்படுத்தப்படாத மூலதன நிதி ஒதுக்கீடுகளை, டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வேறு தேவைகளுக்காக நிதி அமைச்சு மீள்பகிர்வு செய்யவுள்ளதா?

அஸ்வெசும மற்றும் ஏனைய குடும்பங்களுக்கான பண உதவித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள நிதியைப் பயன்படுத்தி, 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது அவர்களுக்கான நிதியுதவித் தொகையை உயர்த்தவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அரசாங்கத்தின் மூலதனச் செலவினங்கள் மற்றும் மக்கள் நலன்புரித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் உண்மையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்குப் பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தை இந்தக் கேள்விகள் முன்னிறுத்துகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு.!

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…

78 0 0
இலங்கை செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா?

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றார்களா என இன்று (14.11.2026) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர்…

83 0 0
இலங்கை செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு; நாடாளுமன்றத்தில் கடும் அமளி.!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் திடீரெனப் பெருமளவில் அதிகரித்தமை தொடர்பில், இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும்…

33 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு.!

2027 ஆண்டில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்குபடுத்தலில் விசுவமடு சந்தியில் நடைபெற்றது. விசுவமடு புளியடி சந்தையில்…

86 0 0