புதையல் தோண்டிய மூவர் கைது.!
நிகவெரட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் புதையல் தோண்டும் நோக்கில் சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திவுல்லகொட பகுதியைச் சேர்ந்த 20 முதல் 42 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் ஆவர்.
நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், திவுல்லகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டப்பூர்வ அனுமதியின்றி குறித்த வீட்டிற்குள் சந்தேக நபர்கள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதன்போது, அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களையும் பொலிஸார் அங்கிருந்து கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிகவெரட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


