உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாவகச்சேரியில் பெரும் பதற்றம்! : போ@தையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்: பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
98 பார்வைகள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

சாவகச்சேரிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தந்தையையும் மகனையும், எதிர்த் திசையில் அதிவேகமாக வந்த கே.டி.எச். ரக வான் ஒன்று நேருக்கு நேர் மோதியதிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

விபத்துச் சம்பவத்தையடுத்து, அந்த வானில் பயணித்த சாரதி உள்ளிட்ட அனைவரும் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டுத் தப்பியோடினர்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி உட்பட அதில் பயணித்த அனைவரும் கடும் மதுபோதையில் இருந்தனர் என்று சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தபோது, தப்பியோடிய சாரதியை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்தி அந்தப் பகுதியில் பெருமளவிலான மக்கள் ஒன்றுகூடியதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், தப்பிச் சென்ற வாகனச் சாரதி உள்ளிட்டவர்களை உடன் கைது செய்யக் கோரி சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக ஊரவர்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் நேற்று இரவு ஒன்றுகூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விபத்து இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தப்பியோடிய வாகனச் சாரதியைச் சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதி மதுபோதையில் இருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளைச் சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் கருத்துக்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது…

81 0 0
இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2027ஆம்…

100 0 0
இலங்கை செய்திகள்

சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதிக்க வேண்டாம் – காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வழமையாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெறும் சாட்டி துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என கூறி காணியின் உரிமையாளர் இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

100 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீரென மயக்கமுற்று விழுந்த இளம்பெண் உயி@ரிழப்பு!

யாழில் இன்றையதினம் திடீரென மயக்கமுற்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நாவலர் வீதி, அரியாலையை சேர்ந்த ஆ.வாசவி (வயது 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து…

99 0 0