உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ்ப்பாணத்தில் திடீரென மயக்கமுற்று விழுந்த இளம்பெண் உயி@ரிழப்பு!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
98 பார்வைகள்

யாழில் இன்றையதினம் திடீரென மயக்கமுற்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நாவலர் வீதி, அரியாலையை சேர்ந்த ஆ.வாசவி (வயது 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் குடல் வருத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அத்துடன் சில்லாலை பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றின் அருட் சகோதரியுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் சில்லாலைக்கு சென்றபோது திடீரென மயக்கமுற்றுள்ளார். அதன்பின்னர் அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சில்லாலையில் உள்ள அருட் சகோதரியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பெரும் பதற்றம்! : போ@தையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்: பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். சாவகச்சேரிப்…

96 0 0
இலங்கை செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் கருத்துக்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது…

79 0 0
இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2027ஆம்…

99 0 0
இலங்கை செய்திகள்

சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதிக்க வேண்டாம் – காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வழமையாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெறும் சாட்டி துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என கூறி காணியின் உரிமையாளர் இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

98 0 0