வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒதுக்கீடு மொத்த அரச செலவினத்தில் 12 சதவீதத்திற்கும் அதிகமானதாகும் எனத் தெரிவித்த அவர், 4,570க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு Smart Board வசதிகளும், 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பேண முடிந்துள்ளதாகவும், சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச சேவையில் இதுவரை சுமார் 40,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


