உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

36 ஆண்டுகால ஏக்கத்துக்கு விடிவு எப்போது? – மயிலிட்டி மக்கள் தொடர் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
120 பார்வைகள்

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இந்த வாரத்துடன் 30ஆவது வாரத்தை எட்டியுள்ளது.

சுமார் 36 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களையும் வாழ்விடங்களையும் இழந்து வாழும் மக்கள், காணிகளை விடுவித்து மீள்குடியேற அனுமதிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டி இராணுவ கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தலைமுறைகளாக வாழ்ந்த பூர்வீக மண்ணில் தங்களால் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்வதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பூர்வீக உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை விடுவித்து மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0