உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

இந்திய செய்திகள் 20 மணி நேரம் முன்
96 பார்வைகள்

சட்டம் -ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க, பொலிஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.

தமிழகத்தில், த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின்னர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சட்ட அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலர் சாய்குமார், உள்துறை செயலர் கார்த்திக், டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சங்கர், சென்னை மாநகர கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம், ‘தமிழகத்தில் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், கூடுதல் பணிச்சுமையில் காவலர்கள் உள்ளனர். காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால், பிரச்சினையை சமாளிக்க முடியும்’ என்று தெரிவித்தனர்.

பொலிஸ் பணிக்கு எடுத்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கி, ஆயுதப்படையில் சேர்ப்பதற்கு ஓராண்டுக்கு மேல் தேவைப்படும் என்பதால், தற்போதுள்ள நிலைமையை சமாளிப்பதற்கு, சட்டம்-ஒழுங்கு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில், போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் உருவாக்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

வரலாற்றைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு : சோனியாவின் நூலை எரித்து எதிர்ப்பு!

1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது நூலை சீக்கிய அமைப்பினர்…

101 0 0
இந்திய செய்திகள்

சோனியா காந்தியின் சுயசரிதை நூலுக்கு அமோக வரவேற்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘BELONGING: A JOURNEY OF LOVE’ புத்தகத்திற்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகக் கடைகளில் நூல்களை…

98 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு நீரிழிவு நோய்!

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது தொடர்பாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு புதிய ஆய்வை நடத்தியது. இந்தியாவில் 25…

97 0 0
இந்திய செய்திகள்

கிராமப்புறங்களில் இலவச மருத்துவ முகாம்களை நடத்திய இளம் மருத்துவர் லாவன்யா காலமானார்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் நரம்பியல் நிபுணர் மருத்துவர் லாவன்யா திடீரென காலமானார். இவரது மறைவு ஆந்திர மருத்துவத் துறையினர் மற்றும்…

104 0 0