அனிருத் காவியா மாறன் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ரஜினி
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தத் திருமணக் கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனது குத்து நடனத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
திருமண கொண்டாட்டத்தின் போது, அனிருத் இசையில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஹிட்டான ‘மனசிலாயோ’ (Manasilaayo) பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.
மணமக்களுடன் அவர் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தத் திருமண நிகழ்வில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டதுடன், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
கிரீஸில் நடைபெற்ற இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சென்னையில் சினிமா, அரசியல் மற்றும் தொழிலதிபா்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


