உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயலமர்வு.!

இலங்கை செய்திகள் 54 நிமிடங்கள் முன்
72 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று (11) இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி, அதில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “Certificate in Tourism Operations” எனும் ஒரு நாள் செயலமர்வு இன்று (11) மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் அனுசரணையுடன், மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றம் இணைந்து இச் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

தலைமன்னார் மணல் திட்டுக்கான படகுச் சேவை, வங்காலை பறவைகள் சரணாலயம், மடு வனாந்தர சபாரி உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை மையப்படுத்தி மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுலாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்தில் இத்துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சுற்றுலாத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் இச் செயலமர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இச் செயலமர்வில் மட்டுப்படுத்தப்பட்ட இளைஞர் யுவதிகளை எதிர்பார்த்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகள் அகற்றும் நடவடிக்கை.!

மாந்தை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அடம்பன் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பு காணப்பட்ட பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகளை அகற்றும் நடவடிக்கை இன்றைய தினம்…

67 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த…

75 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார்…

76 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகர சபை விவகாரம்; குற்றச்சாட்டுகளில் இருந்து தவிசாளர் விடுவிப்பு.!

பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிர்வாக, ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை…

80 0 0