உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

இலங்கை செய்திகள் 19 நிமிடங்கள் முன்
74 பார்வைகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த பொருளாதாரப் போக்கு மற்றும் அது கொண்டுவர முனையும் நீண்டகால மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிதித்துறை பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் அரசு சமர்ப்பிக்கவுள்ள மூன்றாவது வரவு – செலவுத் திட்டம் குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தை ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள பிரதி அமைச்சர், அதன் உண்மையான முக்கியத்துவம் என்பது, அதில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும், உற்பத்தியை விரிவுபடுத்தவும், தரமான முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்பதில் தான் அடங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட முதல் இரண்டு வரவு – செலவுத் திட்டங்களும் நாட்டின் கடுமையான பொருளாதாரச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதிலும், மிகவும் அவசியமான பேரளவிலான பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியுள்ளன என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

தற்போது அந்தப் பொருளாதார நிலைத்தன்மையை நோக்கிய உறுதியான முன்னேற்றத்தை நாடு எட்டியுள்ள நிலையில், அரசு அடுத்த கட்டமாகப் பொருளாதார விரிவாக்கம் மற்றும் முறையான கட்டமைப்பு மாற்றங்களை நோக்கித் தீவிரமாக நகர முற்பட்டு வருகின்றது என்றும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயலமர்வு.!

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று (11) இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி, அதில்…

70 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார்…

75 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகர சபை விவகாரம்; குற்றச்சாட்டுகளில் இருந்து தவிசாளர் விடுவிப்பு.!

பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிர்வாக, ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை…

78 0 0
இலங்கை செய்திகள்

தேசிய ரீதியில் சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மகளிர் அணி.!

அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய கால்பந்து போட்டியில் தேசிய மட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தேசிய ரீதியில் நடைபெற்ற…

91 0 0