உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சமயபுரம் இரட்டைக் கொ@லை வழக்கு: முக்கிய சந்தேகநபர் சுட்டுப்பிடிப்பு!

இந்திய செய்திகள் 9 மணி நேரம் முன்
79 பார்வைகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதி அருகே இரண்டு சிறுவா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற முக்கிய சந்தேகநபரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இனாம் சமயபுரம் பகுதியை சோ்ந்தவா் ராகுல் (17), இவரது உறவினா் வழி சகோதரரான அதே பகுதியை சோ்ந்தவா் விஷால் (17), இருவரும் கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.

இதனிடையே தீபாவளி அன்று இரவு சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக அமா்ந்து இருந்துள்ளனா் . அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் சிலா், ராகுல் மற்றும் விஷாலை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனா்.

இதில் விஷாலின் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், ராகுல் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் கொலை செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இரட்டைக் கொலை தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் உத்தரவின் பேரில் , சமயபுரம் காவல் ஆய்வாளா் குணசேகரன் உள்ளிட்ட காவல் துறையினா் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஆறு பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இரட்டைக் கொலை வழக்கின் முதன்மை சந்தேகநபரானரான சிவனேசனை தூத்துக்குடியில் இருந்து போலீசார் அழைத்து வருகையில், சமயபுரத்தில் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொடுப்பதற்காக வந்தபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.அப்போது, சிவனேசனின் கணுக்காலில் சமயபுரம் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் சிவனேசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவனேசன் பிடிக்கப்பட்டார். காயமடைந்த தலைமைக் காவலர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிவனேசன் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சபரிமலையில் நெய்க்கு தட்டுப்பாடு!

சபரிமலை ஐயப்பன் கோவில் பருவகாலம் நெருங்கும்நிலையில், நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிவதாக தெரிவிக்கப்படுகிறது. திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நேற்று நடந்த நிலையில், அதன் தலைவர்…

84 0 0
இந்திய செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி : தவெக எம்.எல்.ஏயை கைது செய்யுமாறு எடப்பாடி வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக சட்டமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று…

83 0 0
இந்திய செய்திகள்

சென்னை முழுவதும் நான்கு நாட்களில் 567 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

சென்னையில் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் மொத்தம் 567 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று…

76 0 0
இந்திய செய்திகள்

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு…

93 0 0