உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
77 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று புதன்கிழமை (11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி, அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக பேராசிரியர் சமர்ப்பித்த அறிக்கையில் நோயால் இறந்த நபர்களைத்தான் கொண்டு வந்து புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நோயால் இறந்தவர்களை புதைத்திருந்தால் எவ்வாறு ஆடைகள் இன்றியும், கயிற்றினால் கட்டியும், கடுமையாக தாக்கி உடல் பாகங்கள் உடைக்கப்பட்டும், தலையில் காயங்கள், மற்றும் குழந்தைகள் உள்ளடங்களாக அனைவரையும் எவ்வாறு குறித்த இடத்தில் புதைத்து இருக்க முடியும்.

இவ்வாறு நோயால் இறந்தவர்களைப் புதைத்து இருந்தால் வைத்தியசாலையினால் அவர்களின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதற்கான அறிக்கை கொடுத்திருப்பார்கள்.

இவ்வாறு எந்த அறிக்கைகளும் கொடுக்கப்படவில்லை. மன்னாரில் உள்ள மனிதப் புதைகுழிகளை எடுத்துக் கொண்டாலும் அவர் மாறான கருத்துக்களை கூறியுள்ளார். குறிப்பாக ஒல்லாந்தர் காலத்து எலும்புக்கூடுகள் என்றும் அவர் கூறியுள்ளார். பேராசிரியர் ஒவ்வொரு இடங்களிலும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறார்.

அதே மாதிரிதான் தற்போது செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகவும் அறிக்கைகளை விட்டு வருகிறார். ஆனால் ஒரு இராணுவ வீரர் அந்த செம்மணி புதைகுழியில், 1990 ஆம் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த காலத்தில் சுமார் 600 பேர் வரை கொன்று புதைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அப்படி சொன்ன இடத்தில் இன்றைக்கு 583 எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இன்னும் எத்தனை மனித எலும்புக்கூடுகள் குறித்த புதைகுழி பகுதியில் இருக்க வேண்டும். அரசாங்கத்தை காப்பாற்றும் வகையில் அவர் இவ்வாறான கருத்துக்களை கூறி வருகிறார்.

அரசாங்கங்கள் மாறி மாறி வந்தாலும் அந்த அரசை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசையும், இராணுவத்தையும் காப்பாற்றும் நோக்கில் இந்த அறிக்கைகள் விடப்பட்டு வருகிறது. இதனை நாங்கள் ஏற்கவும், நம்பவும் முடியாது.

காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் உறவுகளை கையில் ஒப்படைத்தனர். மேலும் வீடுகளிலும், வீதிகளிலும் வைத்து பிடித்து சென்றுள்ளனர். அகதி முகாம்களில் இருந்த ஆண்களையெல்லாம் அவர்கள் கொண்டு சென்றனர். அந்த 17 ஆயிரம் உறவுகளுக்கும், இதுவரையிலே என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக ஒவ்வொரு வருடமும் வீதியில் நின்று நாங்கள் போராடி வருகிறோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?, எங்களுடைய பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று சொல்லி நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

இதுவரை எங்களுக்கு ஒரு பதில் தராமல், இன்றைக்கு அவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அது நோயால் இறந்தார்கள் என்று.

எனவே எங்களுக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. உள்நாட்டிலே எங்களுக்கு விசாரணை வேண்டாம். நாங்கள் இன்றைக்கு சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம். சர்வதேசம் தலையீடு செய்தால் மாத்திரமே ஒரு நீதி நியாயம் கிடைக்கும்.

தமிழ் தேசியத்தை நாடி நிற்கும் ஒவ்வொரு உறவுகளும் எதிர்வரும் 17ஆம் திகதி (17-11-2026) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்ட சந்ததியிலிருந்து, செம்மணி புதைகுழி வரையும் நடைபவனியிலே கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க இருக்கிறோம்.

இன்னும் எத்தனையோ எலும்புக்கூடுகள் இருக்கிறது. எனவே செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகள் அகற்றும் நடவடிக்கை.!

மாந்தை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அடம்பன் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பு காணப்பட்ட பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகளை அகற்றும் நடவடிக்கை இன்றைய தினம்…

67 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயலமர்வு.!

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று (11) இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி, அதில்…

72 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகர சபை விவகாரம்; குற்றச்சாட்டுகளில் இருந்து தவிசாளர் விடுவிப்பு.!

பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிர்வாக, ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை…

81 0 0